இலங்கை
Typography

கடந்த இரண்டு நாட்களாக முஸ்லீம் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்குதலுக்குள்ளாகும் செய்திகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த கவலையடைவதாக தெரிவித்து ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

ஊரடங்குச் சட்ட நேரத்திலும் பாதுகாப்பு படையினர் இந்த வன்செயல்களை தடுப்பதற்கு உகந்த நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டனத்துக்குரியது என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த இரண்டு நாட்களாக முஸ்லீம் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் காடையர் தாக்குதலுக்குள்ளாகிற செய்திகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலையடைகின்றது.

ஊரடங்குச் சட்ட நேரத்திலும் பாதுகாப்பு படையினர் இந்த வன்செயல்களை தடுப்பதற்கு உகந்த நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டனத்துக்குரியது. வன்முறையாளருக்கெதிராக உடனடியானதும் கடுமையானதுமான நடவடிக்கைகளை அதிகாரத்த்திலுள்ளோர் எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.

அரசாங்கம் தம்மை பாதுகாக்க தவறுகிறது என்று மக்கள் நினைத்தால் அவர்கள் தம்மை தாமே பாதுகாக்க தலைப்படுவார்கள். இப்படியான சூழ்நிலையை அனுமதிக்க வேண்டாம் என்று நாம் அரசாங்கத்தை கேட்டுக் கொள்ளுகிறோம்.

இந்த நாட்டில் தான் சுயமாக வாழ்வதற்கு போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும் என்று இன்னுமொரு சமூகத்தையும் நினைக்கத் தூண்டாதீர்கள். கிறிஸ்தவ ஆலயங்களைத் தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி, பள்ளிவாசல்களை தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி - எவ்விதமான பயங்கரவாதத்திற்கு இந்த நாட்டிலே இடமிருக்கக் கூடாது.” என்றுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்