இலங்கை
Typography

ஊரங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், அதனையும் மீறி வன்முறைகளில் ஈடுபடும் கலகக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார். 

அத்துடன், சட்டத்தைக் கையிலெடுக்கின்ற நாசகாரக் கும்பல்களுக்கு தலைமைதாங்கும் சிலரின் பெயர்கள் குறித்தும், பாதுகாப்புக் கூட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றுள்ள நிலையில், பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்கள், அலரி மாளிகை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள ஒப்பரேசன் அறையில், நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்றன.

இக்கலந்துரையாடல்களில் கலந்துகொண்டபின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்