இலங்கை
Typography

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழங்குகளின் பின்னணியில் கலிபோர்னியாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகம் இல்லை என்று அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, கோட்டாபாய ராஜபக்ஷவின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை. அவருக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளில் பின்புலத்தில் கலிப்போர்னிய கொன்சியூலர் அலுவலகமும் இருந்துள்ளதாக அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. அங்குள்ள கொன்சியூலர் என்னுடன் தொடர்புக்கொண்டு இந்த வழக்குகளுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனக் கூறினார். கலிப்போர்னியாவுக்கான கொன்சியூலராக நியமிக்கப்பட்டுள்ளவர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க பணிப்பாளர்களில் ஒருவராகச் செயற்பட்டிருந்த லக்ஷ்மன் பிரேமசந்திரவே ஆகும். அதனைப் பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுப்பதுடன் இந்த விவகாரத்தின் பின்புலத்தில் கலிப்போர்னியாவுக்கான கொன்சியூலர் அலுவலகம் இல்லை என்பதை உறுதியாக கூறுகிறேன் என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்