இலங்கை
Typography

தோல்வி பயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல்களைத் தொடர்ந்தும் பிற்போடுவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களின் தேர்தலுக்கான உரிமை தொடர்ந்து மீறப்படுவதை கருத்திற் கொண்டு இம்முறை மாத்திரம் பழைய முறையில் தேர்தலை நடத்த நாங்கள் இணக்கம் தெரிவித்தோம். ஆனால் மாகாண சபை தேர்தலை நடத்த எவ்வித முன்னேற்றகரமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 07 மாகாண சபைகளின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில், இம்மாத இறுதி பகுதியில் மேல் மாகாண சபையின் பதவி காலமும் நிறைவுப்ப பெறும். எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையினை மீளாய்வு செய்ய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.

இரண்டு மாத காலத்திற்குள் எல்லை நிர்ணய மீளாய்வு தொடர்பிலான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ள நிலையில் இதுரை காலமும் எல்லை நிர்ணயம் தொடர்பிவ் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. இதற்கு பிரமரின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணம் எனவும் சுட்டிக்காட்டினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்