இலங்கை
Typography

‘அமெரிக்கக் குடியுரிமையை இரத்து செய்யவே நான் அமெரிக்கா சென்றிருந்தேன். ஆனால், இங்குள்ள சிலரும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இணைந்து எனக்கு எதிராக சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளனர்.’ என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார். தனது அமெரிக்கக் குடியுரிமையை இரத்து செய்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த அவர், நேற்றுமுன்தினம் நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு சர்வமத வழிப்பாடுகளுடன் பெரு வரவேற்பளிக்கப்பட்டது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பின்புலத்திலேயே அவர் தமது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்ஷ விமான நிலையத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், ‘எனது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்யும் முகமாகவே நான் அமெரிக்கா சென்றிருந்தேன். அங்குள்ள எனது சட்டத்தரணிகளுடன் ஆலோசனை செய்து அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளேன்.

ஆனால், நான் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் இடம்பெற்ற இரண்டு குற்றச்செயல்களுக்கு நான் பொறுப்புக்கூற வேண்டுமென வலியுறுத்தி இங்குள்ள சிலரும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் எனக்கு எதிராக சிவில் வழக்கொண்றை அமெரிக்காவில் தாக்கல் செய்துள்ளனர். இதற்கு கலிபோர்னியாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகம் உடந்தையாக இருக்கிறது.' என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்