இலங்கை
Typography

“தன்னுடைய பதவிக்காலம் குறித்து மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபிப்பிராயம் கேட்க முயலுவாராயின், அது சுத்த பைத்தியக்கரத்தனமான நடவடிக்கையாகவே இருக்கும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் எப்போது முடிவடையும் என்பதை உயர்நீதிமன்றத்திடம் வினவ ஜனாதிபதி தரப்பு முஸ்தீபுகளை எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்திருப்பது குறித்து கருத்து வெளியிடும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஏற்கனவே உயர்நீதிமன்றத்திடம் இதுபற்றி ஜனாதிபதி வினவினார். அதற்கு உரிய பதிலை உயர்நீதிமன்றம் வழங்கிவிட்டது. அதன்படி தேர்தல் ஆணைக்குழு உரிய நேரத்தில் தேர்தலை அறிவிக்கும்.

அப்படியான நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்பதென்பது அறிவிலித்தனமானது. முன்னர் சொன்னதை மீண்டும் கேட்க வேண்டுமா? 2015 ஜனவரி 09ஆம் திகதி அவரது பதவிக்காலம் ஆரம்பிக்கின்றது. ஆறு வருடத்துக்குத் தெரிவான மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் மட்டுப்படுத்தப்பட்டு ஐந்து வருடமாக குறைக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில், உயர்நீதிமன்றத்திடம் மீண்டும் ஆலோசனை கோருவது, மூக்குடைபடும் செயற்பாடாகவே இருக்கும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்