இலங்கை
Typography

தமிழ் அரசியல் தலைமைகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளே தமிழ் மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் அவர்களை இன்று திங்கட்கிழமை காலை சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை அரசாங்கத்துக்கு ஜெனீவாவில் மேலும் மேலும் கால அவகாசம் வழங்கப்படுவதனால் எந்தவித நன்மையும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை. எமது பிரச்சினைகளை இழுத்து இழுத்து தூர்ந்துபோகச் செய்வதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஒரு அரசியல் தீர்வு ஊடாக வடக்கு- கிழக்கு இணைந்த அரசியல் தீர்வு ஒன்றினை தேர்தலுக்கு இணைவாக பெற்றுக்கொள்வதும் அவசியம். அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்படுவதனால், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. இதனால் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்ச்சியாக இழுபறிக்கே செல்லும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்