இலங்கை
Typography

“நாட்டின் தற்போதைய அரசியல் குழப்பத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகும். இந்த பிரச்சினையை அவர் தொடர்ந்து கொண்டுசெல்கின்றார். அத்துடன் அரசாங்கத்தை வீழ்த்தவே ஜனாதிபதி முயற்சித்து வருகின்றார்.” என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கம்பெரலிய வேலைத்திட்டத்துக்காக அரசாங்கம் 16 பில்லியனை ஒத்துக்கி இருந்தது. ஆனால் ஜனாதிபதி மேற்கொண்ட அரசியல் சதித்திட்டம் காரணமாக கிராமங்களில் மக்களுக்கு சேவை செய்ய முடியாமற்போனது. அத்தோடு, அரசாங்கம் ஆரம்பிக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வேலைத்திட்டத்தையே ஜனாதிபதி முன்னெடுத்து வருகிறார்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்