இலங்கை
Typography

“மக்கள் ஆணையை மதிக்கின்ற அரசாங்கம் தோற்றம் பெற்றதன் பின்னரே புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாகும். அவ்வாறு உருவாக்கப்படும் அரசியலமைப்பு அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பஷில் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கடந்த நான்கு வருட காலமாக முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாகிவிட்டது. தற்போது அதிகார பகிர்வு தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. இவ்விடயத்தில் பல முரண்பாடுகளும் காணப்படுகின்றது. இப்பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காண்பது சாத்தியமற்ற விடயமாகும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்