இலங்கை
Typography

“நாம் முன்னெடுக்கும் அபிவிருத்திகளை பாதுகாத்துக்கொண்டு வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகியன ஒன்றிணைந்து எதிர்காலத்தில் ஆரம்பிக்கவுள்ள தேசிய ஜனநாயக முன்னணியுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் 'கிராமத்தை நோக்கி சிறிகொத்தா' வேலைத்திட்டம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பமாகியது. இதன்போது பாணந்துறை பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“பொருளாதார அபிவிருத்திகள், நல்லிணக்கம், வாழும் உரிமை உள்ளிட்ட அனைத்து விடயங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். எங்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அபிவிருத்தி பணிகள் இத்துடன் நிறைவடைய போவதில்லை. தற்போதுள்ள அபிவிருத்தி பணிகளுடன் எதிர்வரும் ஐந்து வருடங்களில் இன்னும் துரித கதியில் அபிவிருத்திகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்