இலங்கை
Typography

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் அரசியலமைப்புக்கு எதிராக ஆட்சியைக் கைப்பற்ற நினைத்தாலும், அது சாத்தியப்படாது என்று முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

நாட்டு மக்களின் விருப்பத்துக்கமைய, அரசாங்கம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் வரை மஹிந்த ராஜபக்ஷ பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வத்தளை- ஹுனுப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்