இலங்கை
Typography

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தென் இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் இரா.சம்பந்தன், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக, தலைவர் பதவியிலிருந்து விலகி, கூட்டமைப்பின் காப்பாளராக இருப்பார் என்று கூறப்படுகின்றது.

அத்தோடு, கூட்டமைப்பின் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த தலைவராக எம்.ஏ.சுமந்திரனை நியமிப்பதற்கான முயற்சிகளை கட்சியின் உயர்பீடம் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்