இலங்கை
Typography

நாட்டின் ஒற்றையாட்சி, இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அரசியலமைப்பை தயாரிக்க ஐக்கிய தேசிய கட்சி ஒருபோது முயற்சிக்கப்போவதில்லை என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். 

“புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் கூட தயாரிக்கப்படாத நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் அது தொடர்பில் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். விகாரைகளுக்கு சென்று தேரர்களிடமும் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் தொடர்பில் விமர்சிப்பதற்கு எதுவும் இல்லாத காரணத்தினாலே இல்லாத அரசியலமைப்பு தொடர்பாக தெரிவித்து வருகினறனர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலாங்கொடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS