இலங்கை
Typography

“தற்போதுள்ள அரசியலமைப்பின் பிரகாரம், நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, ஜனாதிபதித் தேர்தலில் எம்முடைய வேட்பாளர் வெற்றிபெற்றதும், அரசியலமைப்பில் மாற்றம் செய்வேன்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள மஹிந்த ராஜபக்ஷ ‘தி ஹிந்து’ பத்திரிகையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு ஒன்றில் இன்று சனிக்கிழமை பங்கேற்றுப் பேசினார். அதன்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “2014ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட முடியாது. அதனால் சிறந்த வேட்பாளர் ஒருவரை போட்டியிட வைப்பேன். அந்த வேட்பாளர் வெற்றி பெறுவார். அவர் வெற்றிபெற்ற பின்னர் நான் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வேன்.”

 

BLOG COMMENTS POWERED BY DISQUS