இலங்கை
Typography

பிரதி அமைச்சர் ஒருவரும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் இருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். 

அதன்படி, விசேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சராக வீ.இராதாகிருஷ்ணனும், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சராக அப்துல் மகரூப்பும், தொழில் மற்றும் தொழிற்சங்க விவகார அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ரவீந்திர சமரவீரவும் பதவியேற்றுக்கொண்டனர்.

இதனிடையே, அமைச்சர் தயா கமகேவுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய அவருக்கு சமூக வலுவூட்டல் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்