இலங்கை
Typography

“படுகொலை செய்யப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் தமிழர்களாக இருந்தால், அவர்கள் தொடர்பில் சட்டத்தில் காட்டப்படும் பாகுபாடு காரணமாகவே நாம் சர்வதேச விசாரணையை கோருகின்றோம். குற்றம் செய்த ஒரு தரப்பு நடுவராக இருந்து விசாரணை செய்ய முடியாது. ஆகவே சர்வதேச விசாரணையே வேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய சரத் பொன்சேகாவே சர்வதேச விசாரணைக்கு தயாராக இருக்கும் நிலையில் அரசாங்கம் ஏன் அஞ்சுகின்றது? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டமூலம் மற்றும் ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுதல் சட்டமூலம் குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS