இலங்கை
Typography

கிளிநொச்சி, மண்டைதீவிலுள்ள இரு கிணறுகளில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்வைத்துள்ள கருத்து தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும், இக்கருத்து தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஏனைய ஆணையளர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் காணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். 

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், யாழ்ப்பாணம் மண்டைதீவில் இரு கிணறுகளில் 120 தமிழ் இளைஞர்களின் சடலங்கள் போடப்பட்டு, அவ்விரு கிணறுகளும் கொங்கிறீட்டினால் மூடப்பட்டுள்ளன. உடனடியாக இக்கிணறுகள் தோண்டப்பட்டு அதற்குள் கொன்று போடப்பட்டுள்ள இளைஞர்களின் விபரங்கள் கண்டறியப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார். இதுதொடர்பில் வினவிய போதே சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்