இலங்கை
Typography

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பெயரிடப்பட்டிருப்பதாக அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அந்தக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நிமல் சிறிபால டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு. கட்சியின் யோசனை மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக வேண்டும் என்பதே. அது வேட்புமனு வழங்கும் தினத்திற்கு முன்தினமே தீர்மானிக்கப்படும். சுதந்திர கட்சிக்கு அன்று இருந்த பலம் அதேபோன்று இன்றும் இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 08ம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும். ஒக்டோபர் இறுதியாகும் போது வேட்புமனு பொறுப்பேற்றக்கப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்