இலங்கை
Typography

பதவிக்காலம் முடிந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒத்திவைக்கப்படுவதற்கு அதிருப்தியைத் தெரிவித்து, பெப்ரல் அமைப்பு மீண்டுமொரு தடவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. 

இதுவரை 6 மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளதுடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறையடையவுள்ளதாகவும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே மக்கள் இறைமையான தேர்தல் உரிமையை பாதுகாக்கக் கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொள்ள வேண்டுமென்றும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்