இலங்கை
Typography

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், புதிய ஆளுநர்கள், பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில், வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுர்நர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.

வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன், சப்ரகமுவ மாகாண ஆளுநராக கலாநிதி தம்ம திசாநாயக்க, மற்றும் ஊவா மாகாண ஆளுநராக ரஜித் கீர்த்தி தென்னகோன் ஆகியோரே ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட புதிய ஆளுநர்கள் எனவும் அறிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்