இலங்கை
Typography

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவினை அடுத்து, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஜனாதிபதியிடம் தனது இராஜினாமாக் கடிதத்தை ரெஜினோல்ட் குரே இன்று திங்கட்கிழமை சமர்ப்பித்துள்ளதாக அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினத்திற்குள் மாகாணங்களின் பல ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியிருந்தார். இதனையடுத்தே, அவர்கள் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளனர்.

எனினும், தன்னை பதவி விலகுமாறு வேண்டுகோள் எதுவும் விடுக்கப்படவில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாஹம தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்