இலங்கை
Typography

“எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டும்” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

ரிஷாட் பதியுதீனை கொலை செய்யும் திட்டம் குறித்து நாமல் குமார வெளியிட்ட குரல் பதிவு தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் பொலிஸ் தலைமையகத்தில் அண்மையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ரிஷாட் பதியுதீன் நேற்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “என்னை கொலை செய்யும் திட்டம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ள நிலையிலும், எனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியே இருக்கிறார். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவரே பொறுப்பேற்க வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்