இலங்கை
Typography

ரணில் விக்ரமசிங்க முதலில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

“நமது கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்கான ஆற்றல் ரணில் விக்ரமசிங்கவுக்கு இல்லை. 25 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக செயற்படும் ரணில் விக்ரமசிங்க, அந்தக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் முன்னேற இடமளிக்கவில்லை. முதலில் அவர் தனது கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும்.” என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்