இலங்கை
Typography

“நான் ஜனாதிபதியாகியிருந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போல பயந்து பயந்து வாழ்ந்திருக்க மாட்டேன்.” என்று முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா கூறியுள்ளதாவது, “நான் ஜனாதிபதியாகியிருந்தால், இப்படியெல்லாம் பேச்சு நடத்த முடியாத நிலைமை இருந்திருக்குமென்று, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சந்திப்பில் சொன்னாராம்.

நான் ஜனாதிபதியாகி இருந்தால் இப்படி நடக்க மாட்டேன். என்னை வளர்த்த கட்சி மீது மோசம் செய்திருக்கமாட்டேன். இரவு ஒன்று பேசி பகல் ஒன்றும் பேச மாட்டேன். பயந்து பயந்து வாழ்ந்திருக்கமாட்டேன்.

அமெரிக்காவில் அரச தலைவர்கள் மற்றும் படைகளின் முக்கியஸ்தர்கள் மனநல மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பது போல் இங்கும் அப்படி ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்