இலங்கை
Typography

“நான் ஒரு துரும்பை மாத்திரமே பயன்படுத்தியுள்ளேன். இன்னும் நிறைய துரும்புகள் என்னிடம் இருக்கின்றன. தேவைப்பட்டால் அதனை பயன்படுத்துவேன்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

“எங்களிடம் தேவையான பெரும்பான்மை இருக்கின்றது. இதனால் எனது தீர்மானங்களை நான் எக்காரணத்திற்காகவும் இடையில் நிறுத்தப் போவதில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

14ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சியினரை கேட்டுக்கொள்வதாகவும் இல்லையென்றால், அரசியலமைப்பிற்கு ஏற்றவாறு செய்யக் கூடிய துரும்புகள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்