இலங்கை
Typography

“பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்ட எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து எதிர்காலத்தில் பணியாற்ற தயாராக இருக்கின்றேன்.” என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் “தி இந்து” பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாவது, “ஜனாதிபதியுடன் இணைந்துப் பணியாற்றுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பக்கச்சார்பாகச் செயற்படுவதற்கு, அரசியலமைப்பின் அதிகாரம் வழங்கப்படவில்லை. பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும். பாராளுமன்றத்தில் எனக்கு பெரும்பான்மை உண்டு. அவர்கள் பாராளுமன்றத்தைக் கூட்டாததிலிருந்தே, அவர்களிடம் பெரும்பான்மை இல்லையென்பது புலனாகிறது. பாராளுமன்றத்தைக் கூட்டுவது தாமதிக்கும் போது, நாடு நிலையற்ற தன்மைக்குச் செல்கிறது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS