இலங்கை
Typography

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை ஆயுதங்களை பயன்படுத்தாமல் நிகழ்த்தப்பட்ட சதிப்புரட்சி என்று சபாநாயகர் கரு ஜயசூரிய வர்ணித்துள்ளார். 

இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தூதரகங்களுக்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் விடயங்களை சதிப்புரட்சி என்றே வர்ணிக்கலாம் என ஐந்தாம் திகதி வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தூதரகங்களுக்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள சபாநாயகர், துப்பாக்கிகளையும் டாங்கிகளையும் பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதி புரட்சி என குறிப்பிடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

முழு விடயங்களும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிப்படைதன்மை, ஒழுக்கம், ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றிற்கு மாறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடந்துகொள்கின்றார் என தெரிவித்துள்ள கரு ஜயசூரிய, சிறிசேன தான் நிலைநிறுத்துவதாக சத்தியப்பிரமாணம் செய்த அரசியலமைப்பிற்கு முரணாக நடந்துகொள்கின்றார் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்