இலங்கை
Typography

நேற்று திங்கட்கிழமை இலங்கை தலைநகர் கொழும்பில் அரசு சார்பாக நடைபெற்ற பேரணியில் அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றி இருந்தார்.

இதற்குப் பதில் அளிக்கும் முகமாக இன்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து அண்மையில் ஜனாதிபதியால் ஒருமுகமாக நீக்கப் பட்டவருமான ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க கூறுகையில், என்னுடன் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்தவிதமானவொரு தனிப்பட்ட விரோதம் இருப்பினும் கூட அதற்காகத் தேசத்தை தொடர்ச்சியான குழப்ப நிலைக்குத் தனது சட்ட விரோதமானதும் தார்மீக தர்மத்துக்குப் புறம்பானதுமான செயல்கள் மூலம் தள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக வெளியிட்ட கருத்தில் தமக்கு சேவை செய்வதற்காகவே பொது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அதிபரான சிறிசேன சட்டத்துக்கு விரோதமானதும் தர்மத்துக்கு விரோதமானதும் நடவடிக்கைகள் மூலம் அரசியலமைப்புக் குழப்பத்தை ஏற்படுத்துவது ஏற்கப் பட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்