இலங்கை
Typography

ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் வாகனங்களை மீனப்பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். 

அத்தோடு, நேற்று சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு அலரி மாளிகையை ஒப்படைக்குமாறும் கோரப்பட்டிருந்தார். ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தானே பிரதமர் என அறிவித்துள்ளதுடன் அலரி மாளிகைiயில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரதவாளர்கள் என பெருந்தொகையான ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்குள் காணப்படுகின்றனர். இராஜ தந்திரிகள் அரசியல் தரப்புக்கள் என பலதரப்பட்டவர்களிடமும் ரணில் விக்ரமசிங்க சந்தித்து வருகின்ற நிலையிலேயே அவரது பாதுகாப்பு மற்றும் வாகனங்களை மீளப்பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்