இலங்கை
Typography

ஆசியாவை கேந்திரமாகக்கொண்டு அடுத்து வரும் சில தசாப்தங்களுக்குள் புதிய உலகப் பொருளாதாரக் கட்டமைப்பை கட்டி எழுப்பும் பொறுப்பு ‘ஆசியான்’ அமைப்புக்கும், ஆசிய பொருளாதார வல்லுநர்களுக்கும் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

வியட்நாம் ஹனோய் நகரில் நடைபெற்றுவரும் ஆசியான் உலக வர்த்தக மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘ஆசிய புவிசார் அரசியல் வடிவம்’ எனும் கருப்பொருளில் இடம்பெற்ற இம்மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் ஆசியப்பிராந்திய நாடுகளின் அரசியல் போக்குகள் குறித்து கவனம் செலுத்துவது பற்றியும் சுட்டிக்காட்டினார்.

ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “ஆசிய பொருளாதாரத்தின் எதிர்காலம் இந்து சமுத்திரத்தின் சுதந்திரமான கப்பல் போக்குவரத்திலே தங்கியுள்ளது. பிராந்திய அரசுகளும், இந்து சமுத்திர கடல் வலயத்தை பயன்படுத்துவோரும், ஒன்றுபட்டு இணக்கப்பாட்டுடன் சுயாதீனமான கடல் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்