இலங்கை
Typography

இலங்கையின் இறுதிப் போரில் 8,000க்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அதற்குள், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமியின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்றைய தினம் (புதன்கிழமை) டெல்லியில் கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இறுதிப் போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக சர்வதேச ரீதியில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை. நாங்கள் ஒருபோதும் இனவாத யுத்தத்தை முன்னெடுக்கவில்லை. இரணுவ நடவடிக்கைகளானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே அமைந்ததே தவிர, தமிழ் சமூகத்துக்கு எதிராக இயங்கப்படவில்லை.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்