இலங்கை
Typography

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகாவிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூன்று மணித்தியாலங்கள் வரை நேற்று புதன்கிழமை விசாரணைகளை மேற்கொண்டது.

இதனையடுத்து, குறித்த சம்பவம் இடம்பெற்ற போது, நாட்டில் இராணுவத் தளதியாக இருந்த, தற்போதைய அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் விசாரணைகளை மேற்கொள்ள, குற்றப் பலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்