இலங்கை
Typography

இந்தியா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். 

பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியசாமியின் ஏற்பாட்டில் டெல்லியில் நேற்று நிகழ்வொன்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்தார்.

இந்நிலையிலேயே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் உடனிருந்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்