இலங்கை
Typography

அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தற்போது மாற்ற முடியாது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தனை நீக்கிவிட்டு, தமது அணியைச் சேர்ந்த ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று கூட்டு எதிரணியினர் (மஹிந்த அணி) கோரி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, பாராளுமன்ற சம்பிரதாயங்களின் படியும், அரசியலமைப்பின் பிரகாரமும், தன்னால் தற்போதுள்ள எதிர்க்கட்சித் தலைவரை மாற்ற முடியாது எனறு சபாநாயகர் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்