இலங்கை
Typography

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றவில்லை என்று இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கா தெரிவித்துள்ளார். 

“இராணுவத்தினர் வடக்கில் இருந்து அகற்றப்படுவதாகக் கூறப்படுவது தவறாகும். இராணுவக் குழுக்களை ஒன்றிணைக்கும் பணியே மேற்கொள்ளப்படுகிறது. முகாம்கள் அகற்றப்படும் போது, அதற்கு ஏற்ப அங்கு நிரந்தர வசிப்பிடம் கொண்டவர்களுக்கு அக்காணிகள் வழங்கப்படும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத் தளபதி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தாவது, “வடக்கிலோ அல்லது கிழக்கிலோ எந்த இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது. இராணுவம் குறைக்கப்படுவதாகக் கூறப்படுவது தவறாகும். இராணுவக் குழுக்களை ஒன்றிணைக்கும் பணியே மேற்கொள்ளப்படுகிறது. முகாம்கள் ஒதுக்கப்படும் விகிதத்திற்கு ஏற்ப அங்கு நிரந்தர வசிப்பிடம் கொண்டவர்களுக்கு அவை வழங்கப்படும்.

இராணுவ முகாம் அகற்றப்படும் என யாரும் சந்தேகிக்கத் தேவையில்லை. இராணுவக் குழுக்கள் மட்டுமே ஒன்றிணைக்கப்பட்டு வருகின்றன. இராணுவத்தில் புனரமைப்புப் பணிகள் சகல இராணுவங்களாலும் காலத்திற்குக் காலம் மேற்கொள்ளப்படுவது வழமையாகும். சகல தனிப்பட்ட குழுக்கள் வெவ்வேறு வகையில் கருத்து வெளியிடுகின்றனர்.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்