இலங்கை
Typography

தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதை விடுத்து, நாட்டின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இனங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்காக சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்டுள்ள, பாராளுமன்றக் குழுவின் முதலாவது பிராந்திய மாநாடு கண்டியில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

அங்கு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தங்களுக்கு வழங்குமாறு, கூட்டு எதிரணியினர் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஊடகங்கள் கேள்வி எழுப்பும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடு பிரிவதை, நான் எப்போதும் விரும்பவில்லை. நாங்கள், எப்போதும் தேசிய அரசியலுடன் இணைந்தே இருந்துள்ளோம். அதேபோன்று, தமிழ் மக்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். நாட்டை, சரியான பாதையில் வழி நடத்த வேண்டுமானால், சகல அமைப்பும் சகல தரப்புகளும், சுயாதீனமாக இயங்க வேண்டும். அதேநேரம், நாம் பிரிவினையை எதிர்பார்க்கவில்லை. ஆரம்ப காலத்தில், சோல்பரி ஆணைக்குழு, டொனமூர் ஆணைக்குழு போன்றன, சமஷ்டி முறையை வழங்க முன்வந்த போதும், அன்றைய சமூகம் அதை ஏற்கவில்லை.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்