இலங்கை
Typography

இழைத்த குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும், குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவார்களாயின், அவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவதில் தவறில்லை என்று கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உயிர் ஒன்றை எமக்குக் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது. குற்றம் செய்துவிட்டு சிறைப்படுத்தப்பட்ட பின்னர் அங்கும் தவறு செய்யும் சிலர் உள்ளனர். நல்ல சமூகம் ஒன்றை உருவாக்க முடியாதுள்ளது. போதைப் பொருள் வியாபாரம் நடைபெறுகின்றது.

அதேபோன்று, சிறைப்படுத்தப்பட்ட பின்னர் தனது மனதை சரிசெய்து கொண்டவர்களும் உள்ளனர். அவர்கள் தொடர்பில் நியாயமான முடிவை எடுப்பது தவறல்ல. குற்றவாளி சிறையில் இருந்தும் திருந்த சந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்ளாமல், அங்கும் குற்றம் செய்வதாயின் அவரைத் தூக்கில் தொங்க விடுவதில் தவறில்லை.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்