இலங்கை
Typography

ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு கூட்டு எதிரணியில் மிகவும் தகுதியானவர் சமல் ராஜபக்ஷதான் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

எல்லா சமூகத்தினருடையவும் வரவேற்பைப் பெற்ற, ஊழல் குற்றச்சாட்டுக்கள் அற்ற ஒருவர் சமல் ராஜபக்ஷ என்பதை நாம் அறிவோம். சமல் ராஜபக்ஷதான் தகுதியானவர் என டிலான் பெரேரா, குமார வெல்கம போன்றோரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்தபோது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கூட்டு எதிரணியிலுள்ள சகல கட்சிகளும் கூட்டு பொதுஜன முன்னணி எனும் பெயரில் மலர் மொட்டு சின்னத்தில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்