இலங்கை
Typography

ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் 05ஆம் திகதி நடத்துவதற்கு இயலும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “பாராளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களைப் பார்க்கும்போது, அரசாங்கத்திலுள்ள ஒருசாரார் பழைமை முறைமையில் தேர்தலை நடத்துமாறு கோருகின்றனர். அரசாங்கத்திலுள்ள மற்றுமொரு பிரிவினர் புதிய முறையின் கீழ் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கின்றனர். எது எவ்வாறாயினும், பாராளுமன்றத்திலேயே இது குறித்த இறுதித் தீர்மானம் எட்டப்பட வேண்டும். பிரதமர் நாடு திரும்பியவுடன், இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இம்மாத இறுதிக்குள் தீர்மானமொன்றை எடுப்பார்களாயின், எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் சட்டமூலம் தொடர்பான நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்