இலங்கை
Typography

“வடக்கில் இன்று இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகள், போதைப்பொருள் பாவனை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்கள் என்பன அங்கு மக்களின் அன்றாட வாழ்கையை பெரிதும் பாதித்துள்ளது. இது குறித்து யாரும் வாய் திறக்காதது ஏன்?” என்று அமைச்சர் சரத் அமுனுகம கேள்வி எழுப்பியுள்ளார். 

“வடக்கின் இன்றைய நிலை குறித்து அரசாங்கமாக நாம் அக்கறை செலுத்த தவறி வருகின்றோம். மக்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கான சுதந்திரத்தையும் அமைதியான சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் புலிகள் தொடர்பில் வெளியிட்ட கருத்து தவறானதென்பது எமக்கும் தெரியும், ஆனால் அவரது கருத்தை வைத்துகொண்டு அரசியல் செய்யாது வடக்கின் இன்றைய நிலைமையையும் அனைவரும் சிந்துக்க வேண்டும்.” என்றும் சரத் அமுனுகம மேலும் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்