இலங்கை
Typography

நாட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் கிடையாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

இனவாதங்களை ஒரு ஆயுதமாக கொண்ட சில அரசியல்வாதிகளே அரசாங்கத்திலும், சமூகத்திலும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இனவாதங்களை ஒரு ஆயுதமாக கொண்ட சில அரசியல்வாதிகளே இன்று அரசாங்கத்திலும் சமூகத்திலும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் போன்றோர் இனங்களுக்கிடையில் பிணக்கினை ஏற்படுத்தும் விதமாகவே செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான அரசியல்வாதிகளே தமிழ் மக்களின் குறிப்பாக வடக்கு மக்களின் பிரதான நோக்கம் தனியாட்சி என்றும் பெரும்பான்மை மக்களுடன் அவர்களுக்கு ஒன்றிணைந்து வாழ முடியாது எனவும் தெரிவித்து அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தங்களை கொடுத்து வந்தனர். ஆனால் தமிழ் மக்கள் ஒன்றிணைந்த இலங்கையர்களாகவே வாழ விரும்புகின்றனர்.

விசுவமடு பிரதேசத்தின் இராணுவ அதிகாரி இடம்மாற்றம்பெற்று செல்லும் போது பெருந்தொகையான மக்கள் உணர்வு பூர்வமாக செயற்பட்டமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. மக்களின் மனங்களை வென்ற ஒருவருக்கே இவ்வாறான அங்கீகாரம் கிடைக்கப்பெறும். இதுவே சிறந்த நல்லிணக்கத்துக்கான உதாரணம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்