இலங்கை
Typography

இலங்கையில் மொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால், மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்று தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பிரிவு தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நோக்கில் தென்னிலங்கையில் நடத்திய சத்தியேக்ஷன என்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி மாத்தறை மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

விரைவில் மொழிப் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்த அமைச்சர், பல்கலைக்கழகங்கள் முதலான உயர் கல்விக் கூடங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் அந்நிய மொழிகளை கற்பது உசிதமானது. அரச கருமமொழிக் கொள்கை அமுலாக்கப்படும் விதம் மென்மேலும் சிறப்பாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்