இலங்கை
Typography

காணாமல் போனோருக்கான அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் மன்னாரில் நேற்று சனிக்கிழமை நடத்திய முதலாவது கலந்துரையாடல் நம்பிக்கையளித்துள்ளதாக காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். 

இந்தக் கலந்துரையாடலில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 250 உறுப்பினர்கள் வரையில் பங்கேற்றதாகவும், இது வெற்றிகரமானதாக அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாலிய பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது, “முதலாவது சந்திப்பில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் பங்கேற்றனர். அவர்களுடன் நாம் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டோம். செயல்முறைகள் தொடர்பாக உறவினர்கள் பல கவலைகளை எழுப்பினர். பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள் மனச்சோர்வும் விரக்தியும் அடைந்துள்ளனர். ஆனாலும் அவர்கள் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். காணாமல் போனோர் அலுவலகம், அதன் செயல்பாடுகளின் ஊடாக, மக்களின் நம்பிக்கையைப் பெறும் என்று நம்புகிறது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்