இலங்கை
Typography

ஜனாதிபதியாகும் எண்ணம் ஏதும் தன்னிடம் இல்லை என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெஹிவளையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பஷில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னர் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உரிய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்