இலங்கை
Typography

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று வியாழக்கிழமை முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலை பதவிப்பிரமாணம் செய்தனர். 

வடக்கு மாகாண ஆளுநராக இருந்த ரெஜினோல்ட் குரே மத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாணத்துக்கான ஆளுநராக யாரும் நியமிக்கப்படவில்லை.

பதவியேற்ற ஆளுநர்கள் விபரங்கள்,

ஹேமகுமார நாணயக்கார – மேல் மாகாணம்
கே.சி.லோகேஸ்வரன் – வடமேல் மாகாணம்
திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க – சப்ரகமுவ மாகாணம்
ரெஜினோல்ட் குரே – மத்திய மாகாணம்
மார்ஷல் பெரேரா – தென் மாகாணம்
எம்.பி.ஜயசிங்க – வடமத்திய மாகாணம்
பி.பீ.திசாநாயக்க – ஊவா மாகாணம்

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்