இலங்கை
Typography

இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனவன்முறைத் தாக்குதல்களை அடுத்து அங்கு கடந்த சில நாட்களாக ஊரடங்கு அமுல் படுத்தப் சமூக வலைத் தளங்களைப் பாவிக்கவும் தடை விதிக்கப் பட்டது.

தற்போது நிலமை சற்று சுமுகம் அடைந்துள்ள போதும் மக்கள் மத்தியில் பதற்றத்தையும் வீண் முறுகல்களையும் ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டதாக 186 பேஸ்புக் கணக்காணர்கள் இனம் காணப் பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் விரைவில் கைது செய்யப் படலாம் என தகவல் தொழிநுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவர்கள் மீது சமூக வலைத் தளங்களின் ஊடாக இனவாதத்தைத் தூண்டும் விதத்தில் பொய்யான தகவல்கள் பரப்பியவர்கள் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப் பட்டுள்ளது. முக்கியமாக இதில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தான் சமூக வலைத் தளங்களில் பெரும்பாலானவர்கள் வதந்திகளைப் பரப்பியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் அடையாளம் காணப்பட்ட 186 பேஸ்புக் கணக்கானர்களும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் போலிசாரின் சைபர் பிரிவால் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் படவுள்ளது. இதேவேளை இலங்கையில் தற்காலிகமாக முடக்கப் பட்டிருந்த சமூக வலைத் தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் உட்பட ஏனைய சமூக வலைத் தளங்களும் இன்னும் சில தினங்களுக்குல் சேவைக்குத் திரும்பும் என தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்