இலங்கை
Typography

இலங்கையின் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்டடுள்ள நிலைமையினைக் கவனத்திற்கொண்டு, நாடு பூராகவும் சமூக வலைத்தளங்களது பாவனை, அடுத்து வரும் 72 மணி நேரம் தற்காலிகமாக முடக்கப்படும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கலவரச் சூழல் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான படங்களினாலும், தகவல்களினாலும், மேலும் குழப்ப நிலைகள் உருவாகாதிருக்கவும், நாட்டின் பாதுகாப்பு நிலையினை உறுதிப்படுத்தவும் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

இதன்பிரகாரம், முகநூல், வாட்ஸ் அப், வைபர், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் முகநூல் குறுஞ்செய்திச் சேவை உள்ளடங்கிய சமூக வலைதளங்களின் பாவனை முடக்கப்படுவதாகவும், இவை குறித்து கண்காணிப்புகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல அரச பாடசாலைகளும் கால வரையறையின்றி மூடப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்