இலங்கை
Typography

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். 

தமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அனந்தி சசிதரன், பொ.ஐங்கரநேசன் மற்றும் க.அருந்தவபாலன் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.

அதன்போது, அங்கு இணைத்தலைவர் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சபை ஏற்றுக்கொண்டால் வருகைதந்த மூவரையும் மத்தியகுழுவில் இணைத்துக்கொள்ளமுடியும் எனத் தெரதிவித்தார். இதனையடுத்து குழு உறுப்பினர்களின் சம்மதத்துடன் மூவரும் மத்திய குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS