இலங்கை
Typography

இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றோடு (மார்ச் 01, 2018) ஓராண்டைப் பூர்த்தி செய்கின்றது. 

தொடர் போராட்டத்தையடுத்து, படிப்படியாக பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த டிசெம்பர் மாதம் 28ஆம் திகதி, கேப்பாபுலவு பகுதியில் 111.5 ஏக்கர் காணிகளும், சீனியாமோட்டை பகுதியில் 21.84 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், 104 குடும்பங்களுக்கு சொந்தமான 181 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS