நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக மாற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனுமதி வழங்காது என்று அந்தக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

வரலாற்றில் முதற்தடவையாக தமிழ் அரசியல் கட்சிகள், ஒரே தேசத்தை உருவாக்குவதற்கும் பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கும் உடன்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

“தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் புதிய அரசியலமைப்பானது, நாம் கடந்த 30 வருடங்களாக கோரிக்கைவிடுத்துவரும் 13வது திருத்தச் சட்டத்தைவிடவும் மேம்பட்டதாக அமையுமாக இருந்தால், அதை வரவேற்போம்" என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இனவாத அடிப்படையில் சில கட்சிகள் தமது யோசனைகளைப் புறக்கணித்திருப்பது வருத்தமளித்திருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை முற்போக்கானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான சுயமரியாதை மற்றும் அடையாளம் என்பன புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

“இனவாத அடிப்படைகளை முன்னிறுத்தி புதிய அரசியலமைப்பினைத் தயாரிக்கக் கூடாது. சகல இன மக்களுக்கும் சமமான அங்கீகாரம் வழங்கும் வகையிலான அரசியலமைப்பின் ஊடாகவே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும்” என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

More Articles ...

Most Read